Wednesday, 26 November 2025

🔆பூந்தமல்லி வட்ட சமரச துணை மையத்தில் புதிய பைலட் பிராஜக்ட் 🔆 🔆🌟சமரச முன்னோடி செயல் திட்டம் தொடக்கம் 🔆🌟


🌟வழக்கமான நீதிமன்றத் தீர்வு முறைகளில் இருந்து மாற்றுமுறையில் வழக்குகளுக்கு தீர்வுகாண உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 89ன் கீழாக அமைக்கப்பட்டது தான் பூந்தமல்லி வட்ட சமரச துணை மையம் .🌟

🔆இந்த மையம் துவக்கப்பட்டதில் இருந்து சீரிய முறையில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில்  சமரச தீர்வுகளை வழக்காடிகளிடம் ஊக்குவிக்கவும்,  மாறிவரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதமாக வரும் காலங்களில் சமரச மையங்கள் மூலமான தீர்வு முறைகளை திடப்படுத்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பூந்தமல்லி வட்ட சமரச துணை மையத்தினை சமரச  பைலட் பிராஜக்ட் திட்டத்தின் கீழாக  தேர்வு செய்து புதிய அடிப்படை கட்டமைப்புகளும் சமரசர்களுக்கான செயல் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.   🔆


🔆பூந்தமல்லி நகராட்சி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு நகர் பகுதி ஆகும்.🔆

🌟இங்கே இரண்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களும் ,ஒரு சார்பு நீதிமன்றமும் ,இரண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களும் ,மூன்று நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றது .🌟

வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் பூவிருந்தவல்லி வட்ட சமரச மையத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் விதமாக சமரசமையத்தின் கூகுள் பிளாக்ஸ்பாட்டை  இன்று மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சமரச மைய ஒருங்கினைப்பாளர் திருமதி J.ஜீலியட் புஷ்பா அவர்கள் இன்று 26.11.2025 அன்று தொடங்கி வைத்தார்.